நேற்று பாரளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74 வயது) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
ஜெகதீப் தன்கர் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பாஜக சார்பில் நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவராக போட்டியிட்டார். இதில் 182 வாக்குகளுடன் வெற்றி பெற்று, ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டு பதவியேற்றார்.
இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், உடல்நலக் காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக அளவிலான வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுத்ததை நினைத்துப் பெருமை கொள்வதாகவும் ராஜினாமா கடிதத்தில் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.