Thursday, February 19, 2026

வெற்றிமாறன் To கவுதம் வாசுதேவ் மேனன் 10 படங்களுடன் ‘களமிறங்கும்’ நிறுவனம்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் தன்னுடைய அடுத்த 10 படங்களின், இயக்குநர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த 2025 தொடங்கி வருகின்ற 2027ம் ஆண்டுக்குள் மொத்தமாக 10 படங்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக சுந்தர் சி, வெற்றி மாறன், கவுதம் வாசுதேவ் மேனன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், செல்லா அய்யாவு , அருண்ராஜா காமராஜ், கணேஷ் பாபு, விக்னேஷ் ராஜா ஆகிய தமிழ் இயக்குனர்களுடனும், மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடனும் வேல்ஸ் கைகோர்த்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கண்ட அத்தனை இயக்குனர்களுமே ‘சொல்லி அடிப்பதில் கில்லி’ என்பதால், இவர்களின் இயக்கத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? என, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related News

Latest News