கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக ஞானசேகரனை போலீசார் மீண்டும் கைது செய்தனர். மேலும் ஞானசேகரன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஞானசேகரன் மீதான வழக்கில் முக்கிய சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.