தமிழ் சினிமாவில் திரைப்படங்களை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்.
தற்போது,வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்திற்கான பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. மேலும், பூஜை விழாவிற்காக பிரமாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. அதாவது, வேல்ஸ் மியூசிக் நிறுவனத்தை தொடங்கி உள்ளது. மற்ற அனைத்து பெரிய இசை லேபிள் நிறுவனங்களைப் போலவே, வேல்ஸ் மியூசிக் படங்களின் ஆடியோ உரிமைகளையும் பெறும் என்று சொல்லப்படுகிறது.

மேலும்,தொடக்க விழாவில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.