கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரவின்படி வாகனங்களை அகற்றாவிட்டால் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.