தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன.
இன்று காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது, யார் ஆட்சியை அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதற்கான தெளிவு படிப்படியாக கிடைக்கும்.
இந்த நிலையில் போலீசாருக்கு ஒரு அதிரடி உத்தரவு வெளியாகியுள்ளது. அதாவது, தவெக தலைவர் விஜய் வெளியே வரும் போது , அவரது வாகனத்தை பின் தொடர்ந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், ஊடக வாகனமாக இருந்தாலும் பறிமுதல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் இல்லத்தை சுற்றி CRPF வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்ததால் வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
