வாரிசு ஆடியோ லான்ச்க்கு நாள் குறிச்சாச்சு! குட்டி ஸ்டோரி Loading….

அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள விஜயின் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு முழு வீச்சில் ப்ரோமோஷன் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது படக்குழு.

விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு வரும் பலவித பிரச்சினைகளும் அதற்கு பதிலடியாக அமையும் ஆடியோ லான்ச் நிகழ்வும் வாடிக்கையான ஒன்று. முன்னதாக, ‘வாரிசு’ படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், படத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், நேர்காணல் ஒன்றில் பேசுகையில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தி, social mediaவில் பரவ, வழக்கமாக ஆடியோ லாஞ்சில் விஜய் பேசும் அரசியலுக்கும் குட்டி ஸ்டோரிக்கும் இருக்கும் வேற லெவல் எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்கு ஆடியோ லான்ச் நடக்காத நிலையில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு நிகழப்போகும் ஆடியோ லான்ச் மற்றும் விஜயின் speech ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.