Friday, May 2, 2025

அண்ணா அறிவாலயம் சென்ற வானதி சீனிவாசன்…வரவேற்ற கனிமொழி

திமுக எம்எல்ஏ மயிலை த. வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வருகை தந்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திருமண விழாவில் பாஜகவின் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார். திருமண விழாவுக்காக அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த அவரை திமுக எம்.பி கனிமொழி வரவேற்றார்.

Latest news