புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம் : முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவரின் நினைவாக 1974-1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.

10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த வள்ளுவர் கோட்டம் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

வள்ளுவர் கோட்டத்தில், அய்யன் வள்ளுவர் கலையரங்கம், 100 பேர் அமரக்கூடிய ஆராய்ச்சி மையம், மல்டி-லெவல் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related News

Latest News