கிழித்து எறியப்பட்ட வைரமுத்து படம் ; பா.ஜ.க மகளிரணி ஆர்ப்பாட்டம்

ராமரை இழிவுபடுத்தி பேசிய வைரமுத்துவை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கவிஞர் வைரமுத்து சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமரைப் பற்றி இழிவுபடுத்தி பேசியதாகவும், அவதூறு கருத்து பேசியதாகவும் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக புதுச்சேரி மாநில பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வைரமுத்துவின் படத்தை கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டனர்.

Related News

Latest News