Friday, January 24, 2025

மு.க ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடக்கிறது : வைகோ பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற ஆட்சி பொற்கால ஆட்சி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத் தேர்தல் வரும் பொழுது 200 என்ற இலக்கை தாண்டி இந்திய கூட்டணியின் அங்கமாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.

பொறாமை மிக்கவர்கள் திமுக வளர்ச்சியை கண்டு சகிக்காத பல பேர்பழித்து பேசலாம் எனவும் வைகோ தெரிவித்தார். எல்லா விதத்திலும் திமுக அரசுக்கு தாங்கள் துணை நின்று தோள் கொடுப்போம் என்று கூறிய வைகோ, ஸ்டெர்லைட் ,முல்லை பெரியாறு அணை போல் டங்ஸ்டன் அனுமதிக்கு எதிராகவும் மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Latest news