Friday, January 24, 2025

நடிகர் விஜய்யால் திமுக கூட்டணிக்கு பாதிப்பா? – வைகோ விளக்கம்

நடிகர் விஜயால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று புத்தாண்டை ஒட்டி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, 2026 – சட்டமன்ற தேர்தலுக்காக மண்டல கூட்டங்கள் விரைவில் நட,த்த இருப்பதாக கூறினார். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்றும் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் விஜயின் புதிய கட்சியால் திமுக கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் வைகோ கூறினார். பாஜக- வினால் இந்தியாவின் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்றும் வைகை தெரிவித்தார்.

Latest news