வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பண்டிகை நாட்களை முன்னிட்டு, மதுரை – சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், தற்காலிகமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை தற்காலிகமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.