பீகாரை சேர்ந்தவர் வைபவ் சூர்யவன்ஷி.இவருக்கு 14 வயது ஆகிறது.. IPL போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.. இவர் விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் அசத்தி விட்டார். 35 பந்துகளில் சதம் அடித்து, பல முன்னாள் வீரர்களையும் வாயடைத்து போக வைத்துள்ளார்..
எனவே, இவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ICC விதியின் படி இந்திய அணிக்கு தேர்வாக முடியாத நிலை உள்ளது. அதன்படி, கிரிக்கெட்டில் ஒரு வீரர் விளையாட 15 வயதே தகுதியான வயது.
அதாவது U 19 கிரிக்கெட் உட்பட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இது பொருந்தும். ஆனால் IPL மற்றும் Ranji Trophy ஆகிய உள்ளூர் கிரிக்கெட்டுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்கின்றனர்.. தற்போது IPL போட்டிகளில் வைபவ் விளையாடி வருகிறார்.
சரி இப்போ வைபவ் விளையாட வைப்பதற்கு வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீங்களா?
அதுக்கு ஒரு வழி இருக்கிறது..
ஆம்.. ஆனால்,15 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீரரை விளையாட வைக்க விரும்பினால் அதனை சம்பந்தப்பட்ட நாடு, ICC – யிடம் கோரிக்கையாக வைக்கலாம் என்கின்றனர். அவ்வாறு இந்த கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அவர் இந்திய அணியில் அறிமுகமாக முடியும் என்று கூறுகின்றனர்.
முன்னதாக இந்திய அணிக்காக மிக குறைந்த வயதில் அறிமுகமான வீரர் யார் என்று தெரியுமா?
இந்திய அணிக்காக மிக குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் சச்சின்.
இவருக்கு 16 வயது 205 நாட்களில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.