பெண்களை இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.. – அரசு அதிரடி உத்தரவு

417
  1. உத்தரபிரதேசத்தில் பெண்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்ய மறுத்தால் அவர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது என்றும் எழுத்து பூர்வ அனுமதியின்றி பெண்களை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இரவில் வேலை செய்ய ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு இலவச போக்குவரத்து மற்றும் உணவையும் வழங்க வேண்டும் என அறிவிப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.