Friday, December 27, 2024

கணினியில் வேலை பாக்குறவரா நீங்க? கண்ண காப்பாத்த ஒரே வழி இது தான்

மாறி வரும் வாழ்க்கைமுறை சூழலில் அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து கொண்டே போகிறது. பத்தாத குறைக்கு கோவிட் பெருந்தொற்றும் அதனுடன் வந்த ஊரடங்கு போன்ற சூழல்கள் செல்போனும் கையுமாக 24 மணி நேரமும் இருப்பதை சகஜபடுத்தி விட்டன.

சர்வதேச சுகாதார அமைப்பின் 2021ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலக முழுவதும் 2.2 பில்லியன் மக்களுக்கு கிட்ட மற்றும் தூரப்பார்வை பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கண்பார்வைக் குறைபாட்டுக்கு பல காரணங்கள் இருந்தாலும் மணிக்கணக்கில் செல்போனை பார்த்து கொண்டிருப்பது பார்வைத்திறனை வெகுவாக பாதிப்பதோடு பொதுவான கண் ஆரோக்கியத்துக்கும் குந்தகம் விளைவிப்பதாக மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

செல்போன், கணினி, தொலைக்காட்சி போன்ற ஒளித்திரையை நாளொன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பார்ப்பவர்களின் கருவிழி அளவில் மாற்றம் ஏற்பட்டு பார்வைத்திறன் பாதிப்புகள் படையெடுப்பதாக கூறப்படுகின்றது. அப்போது, கணினி சார்ந்த வேலையில் இருப்பவர்களுக்கு என்ன வழி எனக் கேட்பவர்களுக்கு மருத்துவர்க எளிய பயிற்சி ஒன்றை பரிந்துரைத்துள்ளனர்.

Twenty twenty twenty எனும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 அடி தூரத்திலுள்ள ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகள் வரை பார்க்க வேண்டும் என்ற விதியை கடைபிடிப்பதன் மூலம் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படும் விழுக்காட்டை குறைக்க முடியும் என கூறும் மருத்துவர்கள் அவ்வப்போது கண் சிமிட்டுவதையும் ஒரு பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

Latest news