ஒரு சராசரி இந்தியர் ஒன்றில் இருந்து மூன்று மணி நேரம் வரை earphone பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
Earphone பயன்பாட்டில், எவ்வளவு volume வைத்து கேட்கிறோம் என்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். காரணம், கட்டுப்படுத்தப்படாத ஒலியினால் ஏற்படும் காது பாதிப்பை அறுவை சிகிச்சையால் கூட சரி செய்ய முடியாது.
ஆனால், நவீன வாழ்க்கையின் அங்கமாகவே மாறிப்போன earphoneகளை பாதுகாப்பாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும். நாம் கேட்கும் ஒலியின் அளவு 70 டெசிபல்களுக்கு கீழ் இருந்தால், காது பாதிப்படைவதை தடுக்கலாம்.
அப்படியே, 85 டெசிபல் வரை ஒலியின் அளவு இருந்தாலும், தொடர்ச்சியாக 8 மணி நேரத்திற்கு மேல் கேட்பதை தவிர்க்க வேண்டும்.
எவ்வளவு நேரம் earphone பயன்படுத்துகிறோம் என்பதை விட எவ்வளவு ஒலியில் கேட்கிறோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட்டால் தீவிர காது தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.