புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், ஈரானின் மீது குண்டுமழை பொழியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்கா எங்களை தாக்கினால், அவர்களுக்கு பலமான பதிலடி கிடைக்கும் என கூறியுள்ளார்.
புதிய அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச வருமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தைக்கு ஈரான் வரவில்லை என்றால், வேறு விதமாக அதை முடிப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியன் அமெரிக்காவிற்கு பலமான பதிலடி கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.