‘வரிகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்’ – அதிபர் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருந்தார். மேலும் தனது வர்த்தக கொள்கைகளை எதர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் டிரம்ப் கூறியிருப்பதாவது:-

இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாய் ஈட்டி வருகிறது. இந்த பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. எனது வரிக்கொள்கை உள்நாட்டு முதலீடு அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது. கட்டணங்களால் மட்டுமே அமெரிக்காவில் தொழில்கள் குவிகின்றன. வரிகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள் என கூறியுள்ளார்.

Related News

Latest News