Tuesday, July 15, 2025

மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதில் அண்டை நாடான மெக்சிகோ மீதும் வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தக்காளி விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news