Thursday, July 31, 2025

‘அதிகாரத்தை மீறி செயல்படுகிறார்’ – டிரம்புக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் வர்த்தக நீதிமன்றம் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதி உயர் வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

அமெரிக்க ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கப்படவில்லை. ஒரு அசாதாரண அச்சுறுத்தல் அல்லது அவசரகாலத்தின் போது தேவையான பொருளாதாரத் தடைகளை விதிக்க மட்டுமே ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதிபர் டிரம்ப் தனக்கு இருக்கும் அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News