என்றைக்கு இது பற்றிக்கொண்டு எரியுமோ என்ற நிலையில் தான் இருக்கிறது அமெரிக்கா மற்றும் கனடா இடையே னிடையே நிலவி வரும் அரசால் புரசலாக மோதல்கள். ஏனெனில் தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் கார் உதிரி பாகங்களுக்கு 25% வரை வரி விதிக்கப்படும் என்னும் அமெரிக்காவின் முடிவுக்கு கனடா கடும் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறது.
வரியை காரணமாக வைத்து கனடா-அமெரிக்கா வர்த்தக உறவு பாதிக்கப்பட்டால் இது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுவது கவனிக்கப்படத்தக்கது.
அமெரிக்காவில் ஓடும் 10 கார்களில் 1 கார் கனடாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு காரணம் கனடாவை விட அமெரிக்காவில் தயாரிப்பு செலவு அதிகம். ஆகவே அமெரிக்க நிறுவனங்கள் கனடாவில் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி அங்கு உற்பத்தி ஆலைகளை அமைத்து கார்களை தயாரித்து அமெரிக்காவுக்குள் அனுப்பி வருகின்றது. கனடாவில் கார் தயாரிப்பு குறைவுதான் என்றாலும் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் கனடா 14% மற்றும் மெக்சிகோ 37% தேவையை பார்த்துக்கொள்கிறது. இரண்டையும் சேர்த்தால் 51%.
இந்நிலையில் கனடா இல்லையெனில் அமெரிக்காவில் கார்கள் ஓடுவது சற்று கடினம் என்றே சொல்லலாம். இவ்வளவு தேவைகளை வைத்துக்கொண்டு எதற்காக டிரம்ப் வரியை விதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மட்டுமல்லாமல் அமெரிக்கா-கனடா மோதலால் இந்தியாவுக்கும் பாதிப்பு இருக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கார் ஏற்றுமதி ஆவது கிடையாது என்றாலும் உதிரி பாகங்கள் ஏற்றுமதியாகின்றன. அதேபோல கனடா, மெக்சிகோவில் உள்ள Ford, GM, Tesla, BMW போன்ற ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு தேவையான டெக் பொருட்களை இந்தியாவில் உள்ள Infosys, TCS, Wipro, HCL போன்ற IT நிறுவனங்கள் செய்து கொடுக்கிறது.
அமெரிக்காவுடன் இந்த நாடுகள் உறவை முறித்திக்கொண்டால் அந்தந்த நாடுகளில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் டெக் செலவை குறைக்கும். இது இந்தியர்களுக்கு பாதிப்பதோடு Bharat Forge, Motherson Sumi, Sundaram Fasteners போன்ற உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.