மாம்பழ சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் அவசர முறையீடு

மாம்பழ சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அன்புமணிக்கு வழங்கப்பட்ட மாம்பழம் சின்னத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராமதாஸ். கட்சி பிரச்சனை முடிந்தபிறகே சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ராமதாஸ் மனு அளித்தார்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழக்கு தாக்கல் செய்ய உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Related News

Latest News