Tuesday, July 22, 2025

முகமெல்லாம் வீங்கிப்போச்சு.., உதடு வீங்கி கதறும் உர்ஃபி ஜாவேத்

இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத் (Urfi Javed). இவர் வித்தியாசமான ஆடைகளை அணிந்து இணையதளத்தில் அடிக்கடி வைரலாகி வருபவர். தற்போது இவர் தனது உதட்டில் காஸ்மெடிக் சர்ஜரி செயதுகொண்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

உர்ஃபி ஜாவேத் தனது 18 வயதிலேயே உதட்டில் லிப் ஃபில்லரை போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், அது சரியாக இல்லை என்றும் 9 ஆண்டுகள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு அதன் மூலம் தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

லிப் ஃபில்லரை நீக்கிவிட்டு இயற்கையான அழகுடன் இருக்கலாம் என முடிவு செய்த அவர் உதட்டில் ஊசிப்போட்டு தனது லிப் ஃபில்லரை நீக்கியுள்ளார். இதனால் அவருக்கு உதடு எல்லாம் வீங்கிப்போய், முகமெல்லாம் வீக்கத்துடன் சிவந்து போய்விட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news