உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். 52 வயதான ராணி என்ற அந்த பெண் தனது புகைப்படத்தை Filter மூலம் பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த விஷயம் அருணுக்கு தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் ராணி அருணை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அருணை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.