சீன ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் தயாரிப்பாளர் OnePlus, அதன் புதுமையான டேப்லெட் OnePlus Pad 3 ஐ செப்டம்பர் 5 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இரண்டு மாடல்களில் வரும் இந்த டேப்லெட்டின் விலை ₹47,999 மற்றும் ₹52,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்
12GB RAM / 256GB சேமிப்பு — ₹47,999
16GB RAM / 512GB சேமிப்பு — ₹52,999
இந்த டேப்லெட்டை அமேசான், ஃபிளிப்கார்ட், OnePlus நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் மூலம் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
அறிமுக சலுகைகள்
செப்டம்பர் 5 முதல் 7 வரை உண்மையில் வாங்குபவர்களுக்கு ₹7,198 மதிப்புள்ள OnePlus Stylo 2 மற்றும் OnePlus Pad 3 ஃபோலியோ கேஸ் இலவசமாக வழங்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ₹5,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால், மொத்த விலை குறைவாக ₹42,999 மற்றும் ₹47,999 ஆகக் கிடைக்கும்.
தொழில்நுட்ப விவரங்கள்
செயலி: Qualcomm Snapdragon 8 Elite
டிஸ்ப்ளே: 13.2-இன்ச் 3.4K IPS LCD, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 900nits உச்ச பிரகாசம், 540Hz டச் சாம்பிளிங்
ரேம்: 12GB அல்லது 16GB LPDDR5T
சேமிப்பு: 256GB அல்லது 512GB UFS 4.0
எடை மற்றும் தடிமன்: வெறும் 5.97 மிமீ தடிமனும், 675 கிராம் எடையும்
ஒப்பரேட்டிங் சிஸ்டம்: Android 15-ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 15, 3 ஆண்டுகள் OS புதுப்பிப்புகள், 6 ஆண்டுகள் பாதுகாப்பு இணைப்புகள்
மல்டிமீடியா: 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மேம்பட்ட ஒலி அனுபவம்
மல்டி-டாஸ்கிங்: Open Canvas, Multi-Device Connect ஆகிய அம்சங்களை கொண்ட முழுமையான செயல்திறன்
கேமரா விபரங்கள்
பின்புறம்: 13MP கேமரா LED ஃபிளாஷ் உடன்
முன்புறம்: 8MP வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபி கேமரா
பேட்டரி மற்றும் சார்ஜிங்
பேட்டரி: 12,140mAh பெரிய பேட்டரி சக்தி
சார்ஜிங்: 80W SuperVOOC வேகமான வயர்டு சார்ஜிங் ஆதரவு