உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அவற்றை பல லட்சங்கள் பெற்று போலிச் சான்றிதழ்கள் விநியோகித்து வந்தது தெரிய வந்தது.
இதன் முக்கிய குற்றவாளியாக இருக்கும் மோனாட் பல்கலையின் தலைவர் சவுத்ரி விஜயேந்திரா சிங் உட்பட 10 பேர் கைதாகி உள்ளார். சவுத்ரி விஜயேந்திரா சிங் மீது ஏற்கெனவே சுமார் 100 மோசடி வழக்குகளும் பதிவாகி உபியின் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன.