உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா. இவர் கடந்த 36 வருடங்களாக பெண் வேடத்திலேயே வாழ்ந்து வருகிறாராம். பேய்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்த இவர் பெண் வேடமிட்டு வாழ்ந்தால், ஆவிகளிடம் இருந்து தப்பிக்கலாம் என கருதி இந்த முடிவிற்கு வந்துள்ளாராம்.
இவருடைய 2-வது மனைவியின் மரணத்திற்கு பிறகு ஒரு ஆவி தன்னை தொந்தரவு செய்வதாகவும், அந்த ஆன்மா தன்னை ஒரு பெண் போல வாழ கட்டாயப்படுத்தியதால் அவ்வாறு வாழ்வதாகவும் கூறி வருகிறார். மேலும் தனக்கு 9 மகன்கள் பிறந்ததாகவும், அதில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நபர் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் சிலர் கருதுகின்றனர்.