உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று ஆக்ராவில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமானத்தில் புறப்பட்டார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவரச அவசரமாக தரையிக்கப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, 2 மணி நேரம் தாமதமாக யோகி ஆதித்யநாத் புறப்பட்டு சென்றார்.
விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.