கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் விசாரித்த போது மாணவி கூறிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி படிக்கும் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக மகளிர் காவல்துறையில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் 3 ஆசியர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.