Saturday, September 27, 2025

குறைந்த விலையில் அன்லிமிடெட் 5ஜி : ஏர்டெல்லுக்கு சவால் விடும் வி.ஐ

வி.ஐ (வோடபோன்ஐடியா) 5ஜி சேவை விரிவாக்கத்தில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளது. தற்போது, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, மதுரை, விசாகபட்டினம், ஆக்ரா போன்ற முக்கிய நகரங்களிலும் தனது 5ஜி நெட்வொர்க் கொண்டுள்ளது.

தற்போது வி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை வழங்கியுள்ளது.

வி.ஐ 5ஜி திட்டங்கள்

  • ப்ரீபெய்ட் திட்டங்கள்: ரூ.299 முதல் துவங்கி, தினசரி டேட்டா ஒதுக்கீடு மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன்.
  • போஸ்ட்பெய்ட் திட்டங்கள்: மாதம் ரூ.451 முதல் ஆரம்பித்து, அதே அன்லிமிடெட் 5ஜி வசதியை வழங்குகிறது.

5ஜி சேவை பயன்படுத்த தயாராக இருக்க வேண்டியவை

  • உங்கள் மொபைல் போன் 5ஜி இணைப்புக்கு ஆதரவு தர வேண்டும்.
  • 5ஜி சேவையை பயன்படுத்த ஏற்ற சிம் கார்டு உங்களுக்கு இருக்க வேண்டும்.
  • உங்கள் மொபைல் நெட்வொர்க் அமைப்புகளில் 5G தானாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் 5ஜி திட்டங்களில் தேவையான ரீசார்ஜ் / பில்களைச் செய்திருப்பது அவசியம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News