மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சரின் மகள் மற்றும் அவரது தோழிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற விழாவில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சரான ரக்ஷா கட்சேவின் மகள் மற்றும் அவரது தோழிகள் சிலர் பங்கேற்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த சிறுவர்கள் குழுவால் மத்திய அமைச்சரின் மகள் மற்றும் அவரது தோழிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஒருவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரக்ஷா கட்சே. ஒரு மத்திய அமைச்சரின் மகளுக்கே இதுபோன்ற விஷயங்கள் நடந்தால், சாதாரண பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறினார்.