மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 31-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி பாஜகவின் தமிழக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் அடுத்த மாநில தலைவர் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.