Sunday, April 20, 2025

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ். வெளியான முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் படி குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வு வயதுக்கு முன்பாக பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

25 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியபின் ஊழியர் தானாக முன்வந்து ஓய்வு பெற்றால், ஊழியர் ஓய்வு பெறும் தேதியிலிருந்து ஓய்வூதியம் தொடங்கும். ஓய்வூதியர் இறந்தால் அவரது இறப்புக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதம், ஓய்வு பெற்ற தேதியில் அல்லது தானாக முன்வந்து ஓய்வு பெற்ற தேதியில் சட்டபூர்வமாக வாழ்க்கைத் துணையாக இருந்தவருக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதே நேரம் ராஜினாமா செய்தவர்கள் அல்லது ஏதேனும் காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்ட நபர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியம் கிடைக்காது.

புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இரு வாய்ப்புகள் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதில் ஏதேனும் ஒன்றை வாய்ப்புள்ளவர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அவ்வாறு ஒருமுறை தேர்வு செய்த பின்னர், அதனை ஊழியர்கள் மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news