Saturday, January 18, 2025

போரிலும் மலர்ந்த காதல்

பிப்ரவரி மாதமே துவங்கிய போர் ரஷ்யா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

எனினும், சோகமான சூழ்நிலையையும் தாண்டி, உக்ரைனில் இருந்து நெஞ்சை தொடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது.

சைரன் சத்தம் ஒலிக்க, உக்ரேனிய மீட்புப்படை வீரர் ஒருவர் தனது காதலியிடம் ப்ரொபோஸ் செய்யும் காட்சியை, உக்ரைனின் உள்நாட்டு விவகார துறை அமைச்சர் Anton Gerashchenko, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இருளின் நடுவே தோன்றும் ஒளி போல, போரிலும் மலர்ந்த காதல் சுற்றியுள்ளவர்களுக்கு தரும் இனம்புரியாத தைரியத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ வைரலாகி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest news