லண்டனில் குரங்கு அம்மை நோய் தொற்று ! அச்சத்தில் மக்கள்

396
Advertisement

குரங்கு அம்மை என்பது ஒரு அரிதான அதேநேரம் தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். எலிகள் மத்தியில் தான் இந்த வைரஸ் உயிர் வாழும். ஆனால், சில சமயங்களில் இது மனிதர்களுக்கும் கூட பரவும் ஆபத்து உள்ளது.

இந்நிலையில், லண்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தகவலின்படி , நைஜீரியா நாட்டுக்குச் சென்று , நாடு திரும்பிய நபர் ஒருவருக்கு இந்த நோய் பரவியுள்ளது.

பாதிக்கப்பட்ட  நபரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இவருடன்  நைஜீரியாவில் இருந்து பயணித்த இருவரின் தகவலை எடுத்து வருகிறது அந்நாட்டு சுகாதாரத்துறை.இந்த தோற்று மற்றவர்களுக்கும் பரவக்கூடும் என்பதால் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகிறது அந்நாட்டு அரசு.

மேலும் இந்த குரங்கு அம்மை நோய் லண்டனில் பரவ வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.