நாட்டு விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய இமானுவேல் சேகரனின் புகழ் ஓங்கட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, தியாகி இமானுவேல் சேகரன் தீண்டாமையை ஒழித்து, சமூக விடுதலைக்காக போராடினார் என்றும் சமத்துவம் படைக்க சமரசமற்ற போராளியாக வாழ்ந்து மறைந்தவர் எனவும் கூறினார்.