வ.உசிதம்பரனாரின் சிலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னையில் காந்தி மண்டப வளாகத்தில் உள்ள வ.உசிதம்பரனாரின் சிலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உசிதம்பரனாரின் திருவுருப்படத்திற்கும் அவர் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் அன்பில்மகேஷ், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வ.உ. சிதம்பரனாரின் திருவுருப்படுத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.