சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இன்று முதல் அமல் படுத்த உள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திற்கான விதிமுறைகள், அதிகாரிகளுக்கான பயிற்சிகள் என அனைத்தும் நிறைவடைந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம் சமுதாயத்தில் அனைவருக்குமான உரிமைகளையும், பொறுப்புகளையும் சரிசமமாக வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று மதியம் உத்தரகாண்ட் தலைமைச் செயலகத்தில் பொது சிவில் சட்டத்திற்கான இணையதளத்தையும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.