Thursday, May 8, 2025

மே தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகனங்களின் விழிப்புணர்வு பேரணி

சென்னை, பாடி, மேம்பாலம் அருகே மே தினத்தை முன்னிட்டு தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை அம்பத்தூர் உதவி ஆணையர் மற்றும் கொரட்டூர் ஆய்வாளர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 500 பேர் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு இரு சக்கர பேரணியில் தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந்தப் பேரணி டிவிஎஸ் லூக்காஸ் நிறுவன வளாகத்தில் தொடங்கி பாடி மேம்பாலம் வழியாக சென்று கொரட்டூரில் முடிவடைந்தது. இரு சக்கர வாகன பேரணியில் பங்குபெற்ற தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிவது குறித்த பதவிகளை ஏந்தியபடி பயணித்தனர்.

Latest news