Saturday, February 22, 2025

சிறையில் கைதியை பார்க்க லஞ்சம் : வார்டன்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட்

தருமபுரி மாவட்ட சிறையில் கைதி பார்க்க லஞ்சம் வாங்கிய வார்டன்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தருமபுரியில் மாவட்ட சிறையில் 150க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். இங்கு கைதிகளை பார்க்க வருவோரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக சிறை விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடத்திய விசாரணையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில இளைஞர்களை பார்க்கவந்த அவரது சகோதரரிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறை வார்டனங்களான சவுந்தர்ராஜன் மற்றும் திருப்பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Latest news