கேரளாவின் பிரபலமான ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி, ஏற்கனவே ஒரு பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த நிலையில், தற்போது மேலும் இரு பெண்கள் நேரடியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில், ஒரு பெண் டாக்டர், வேடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 2021 முதல் 2023 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பணமோசடி செய்ததாகவும் கூறி புகார் அளித்தார். இந்த வழக்கில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில், மேலும் இரு பெண்கள் புதிய புகார்களை அளித்துள்ளனர்.
பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் பாலியல் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.