Sunday, April 20, 2025

ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்

ஜார்க்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் அதிகாலை 3:30 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் லோகோ பைலட்டுகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் இரண்டு என்ஜின்களும் தீப்பிடித்து பலத்த சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாட்ச் தீயணைப்பு படையினர் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் இரண்டு இயந்திரங்களும் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.

விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Latest news