இத்தாலியின் வடக்கு பிரெசியா அருகே உள்ள A21 தேசிய நெடுஞ்சாலையில் சிறிய விமானம் ஒன்று விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா மற்றும் 55 வயதான அவரது மனைவி உயிரிழந்தனர்.
விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் இருந்த இரண்டு கார்கள் தீக்காயமடைந்து எரிந்தன. ஒரு கார் ஓட்டுனர் கடுமையான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
நெடுஞ்சாலை இரு பக்கமும் மூடப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.