பீகார் மாநிலத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் நாக்ரி ஹால்ட் என்ற பகுதியருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.