தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தனியாருக்கு சொந்தமான சொகுசு மதுபான கூடத்தை அகற்றக்கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுபான கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது தமிழக வெற்றி கழக தொண்டர் ஒருவர் காவலரை கையை கடிக்கும் வீடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.
