மருத்துவமனைக்குள் த.வெ.க வினர் அடாவடி : நோயாளிகள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள காட்டுசெல்லூர் கிராமத்தை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஜெயமணி, சரவணன், செந்தில்முருகன் ஆகிய மூன்று பேரும் திமுக நிர்வாகிகளால் தாக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்துள்ளார். இதை அறிந்த தவெக நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்ததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தவெக நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பொது நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்து, அங்குள்ள நோயாளிகளின் படுக்கை உள்ளிட்டவற்றின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களையும் சேதப்படுத்தியும், கூச்சலிட்டும், புகைப்படங்கள் எடுத்தும் அடாவடியில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Related News

Latest News