சென்னையில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு விஜய் மதுரை விமான நிலையம் வந்திரங்கி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிக்கு செல்கிறார். அவரைப் பார்ப்பதற்காக மதுரை விமான நிலையத்தில் இன்று காலை முதலே கூட தொடங்கிய விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினரால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் தவெக கட்சியினருக்கு அனுமதி இல்லை எனவும் விமான நிலையம் வெளிப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ வில் விஜயை காணலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் பரவியதையடுத்து காவல்துறை ஆணையர் லோகநாதன், இதுபோல் எந்த ரோடு ஷோ வுக்கும் அனுமதி கிடையாது எனவும் யாரும் விமான நிலையம் பகுதியில் கூட கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இதனால் விமான நிலையம் வெளிப்பகுதியில் த வெ க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் சிறு தடியடி நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது