செஞ்சியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி சரவணன் காதல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன் தினம் மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சரவணன் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து சரவணன் மற்றும் அவரது சகோதரி சங்கீதா ஆகியோர் மீது பெண் குழந்தைக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தவெக நிர்வாகி சரவணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.