Tuesday, April 22, 2025

“இதுபோன்ற அடக்குமுறைகளை கைவிட வேண்டும்” – பாஜகவினர் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : மதுபான விற்பனை மற்றும் விநியோகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில், அத்தகையை பெரும் ஊழலுக்கு எதிராக போராட முயன்ற பாஜக-வின் தலைவர்களை கைது செய்வதும், வீட்டுச் சிறையில் அடைத்து வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களையும் கண்டுகொள்ளாத காவல்துறை ஊழலுக்கு எதிராக போராடும் தலைவர்களை கைது செய்திருப்பது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியினர் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும். இதுபோன்ற அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Latest news